ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மரணம்
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மரணம்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் சேக் கலீபா பின் சயத் அல் நகியான் (73) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் 2004-ஆம் ஆண்டு முதல் முக்கிய அரபு அமீரக அதிபராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மே 13 வெள்ளிக்கிழமை காலமானார் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு அந்நாட்டு அதிபர் விவகாரத் துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.2004ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சையத் இருந்து வந்தார்.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3, 2004 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார்.
முதல் மூன்று நாட்களுக்கு பொது மற்றும் தனியார் துறையில் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் கொடிகளுடன் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்