Breaking News

கணவனை அடித்து வெளுத்து வாங்கும் மனைவி... வைரல் வீடியோ...

அட்மின் மீடியா
0

ராஜஸ்தானில் தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக அரசு பள்ளி தலைமையாசியர் சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் பகுதியில் வசித்து வருபவர் அஜித் சிங். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார் இவர் கடந்த  7 ஆண்டுகளுக்கு முன் சுமன் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்குள் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு சண்டை வருகின்றது மேலும் மனைவி கணவனை அடித்து வெளுத்துள்ளார் ஒரு கட்டத்தில் தாங்க முடியாத கணவர், தான் தாக்கப்படும் CCTV வீடியோவை போலீசாரிடம் ஆதாரமாக வழங்கி மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.. 

அந்த வீடியோவில், அஜித் வீடு முழுவதும் ஓடஓட அவருடைய மனைவி கிரிக்கெட் பேட்டால் துரத்தி துரத்தி அடிக்கிறார், மேலும் கையில் கிடைக்கும் இரும்பு வாணலி போன்றவற்றையும் ஆயுதங்களாக்கி தாக்குகிறார். 


வீடியோ:- 

https://twitter.com/UtkarshSingh_/status/1529317772231987200

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback