சென்னை பஸ் ஆப் டவுன்லோடு செய்ய- சிறப்பம்சம் முழு விவரம்
சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து வழித்தடங்கள் மற்றும் பேருந்து நேரம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் CHENNAI BUS என்ற Mobile Appஐ, மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார்
ஆப் சிறப்பம்சம்:-
பேருந்து வருகை நேரம்,
பேருந்து வந்து கொண்டிருக்கும் இடம்
நீங்கள் இருக்கும் பேருந்து நிறுத்தம்
பேருந்து வழித்தட எண்,
உரிய பேருந்து வழித்தட எண்ணை கிளிக் செய்தால் வரைபடத்துடன் கூடிய தகவல்கள் கிடைக்கும்
பேருந்து எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டிருக்கிறது நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.
பயணிகள் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே தெரிவித்திட, இச்செயலியில் உள்ள SOS என்ற பொத்தானை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம்
நீங்கள் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தை கிளிக் செய்தால் அந்த பேருந்து நிறுத்தத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளின் பட்டியல்
இந்த ஆப் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பயணிகளுக்கும் இந்த ஆப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
சென்னை நகரத்திற்கு புதிதாக வருகை தரும் மக்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்ததிற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏதுவாக இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது.
ஆப் செயல்முறை:-
Google Play Store App-க்கு செல்லவும் “CHENNAI BUS” App-டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள்
அடுத்து உங்கள் மொபைலில் இருப்பிடத்தை (Location) on செய்ய வேண்டும்.
தங்களது செல்லிடை பேசியில் “CHENNAI BUS” Logo-வை Open செய்ய வேண்டும்.
Opening Screen-ல் தங்களது இருப்பிடம் மற்றும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம் தங்களது செயலியில் தெரியும்.
தாங்கள் எந்த பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டுமோ அதனை Click செய்தால் அந்த பேருந்து நிறுத்ததிற்கு வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளும், வரிசைப்படி, தட எண், பேருந்து பதிவு எண் மற்றும் கணிக்கப்பட்ட நேரம் (நிமிடங்களில்) உங்கள் மொபைல் போனில் தெரியவரும்.
தாங்கள் செல்ல வேண்டிய தட எண்ணை தேர்வு செய்யும் போது, தாங்கள் நிற்கக்கூடிய பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து வரும் இடம் ஆகியவை செல்லிடை பேசியில் வரைப்படத்துடன் தெரியவரும்.
ஆப் டவுன்லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=io.ionic.starter67676
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்