Breaking News

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் நியமனம்

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா அவர்கள் நேற்ரு மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதைதொடர்ந்து, ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, அவரது சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஏழு அமீரகங்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட பெடரல் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களால் ஷேக் முகமது அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் நாட்டின் மூன்றாவது அதிபர் என்ற ஷேக் முகமது பின் சையத் பெருமையை பெற்றுள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback