கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு!!
வழக்கு விவரம்:-
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 23 வயது விஸ்மயா வி நாயர் என்ற பெண், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார் இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மேலும்
விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா
காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது இவரை கணவர் கிரண்குமார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.
விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
நூறு சவரன் நகை, நிலம், கார் என வரதட்சணையாக் கொடுத்துள்ளார்கள்
இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார். திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா.வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார்.
மேலும் தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்றம் கிரண் குமார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த
வழக்கில், கிரண் குமார் மொபைலில் இருந்த மெசேஜ்கள், விஸ்மயாவின் ஆடியோ
மெசேஜ்கள் மற்றும் விஸ்மயாவின் உடற்கூராய்வில் அவர் உடலில் இருந்த காயங்கள்
உள்ளிட்ட பல டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் விஸ்மயா மரணத்திற்கு
கிரண் குமார் காரணம் என்று கூறி அவரை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்