பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை போட்டது ஏன் ? மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் !!
பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கான பணிகள் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது, இதற்காக 30 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 22 வகையான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.அதேசமயம் பிரியாணி திருவிழாவிற்க்கு வருகை தரும் மக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என்பது உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என்று எஸ்டிபிஐ, விசிக, மமக கட்சிகள் அறிவித்துள்ளன. விழா வளாகம் முன் பீப் பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட வகைகளில் பிரியாணி இருக்கும் போது பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்