இனி தேச துரோக வழக்கு பதிவு செய்யகூடாது உச்ச நீதிமன்றம் தடை.. சட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
இந்திய தண்டனை சட்டம் IPC 124 A-யை மறுபரிசீலனை செய்யும் வரை, இந்த பிரிவின் கீழ் புதிய பதிவு செய்ய மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மேல் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
மேலும் ஏற்கனவே இந்த பிரிவில் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற்று கொள்ளலாம் எனவும் உத்தரவு
இந்திய தண்டனை சட்ட பிரிவு 124 ஏ ஆங்கிலேயே காலனிய ஆட்சியின்போது அரசுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் விதமாக தேசத்துரோக வழக்குகள் பதியப்பட்டன. நாடு விடுதலை பெற்ற பின்னரும் காலனிய சட்டமான தேசத் துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது
இந்நிலையில் தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவான 124A-ஐ ரத்து செய்ய வேண்டும் என எடிட்டர்ஸ் கில்டு, பத்திரிக்கையாளர் அருண் சோரி, எம்பி மௌவா மைத்ரா, பி.யு.சி.எல் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது அப்போது
மத்திய அரசும் மாநில அரசுகள் தேச விரோத சட்டத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி அமர்வு, அதனையும் மீறி ஏதேனும் வழக்குகள் எங்காவது பதிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டது. இதுதொடர்புடைய வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்