தமிழ்நாடு ஹஜ் குழுவிற்க்கு 9 உறுப்பினர்கள் நியமனம் முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு ஹஜ் குழுவிற்க்கு 9 உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக நவாஸ் கனி, எம்பி உட்பட 9 பேரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக
- மாநிலங்களவை உறுப்பினர் நவாஸ்கனி,
- சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.எம்.என். அசன் மவுலானா, அப்துல் வஹாப்,
- நாகப்பட்டினம் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் மசூதிகள் சங்க தலைவர் எஸ்.சையது முகமது கைப் சாஹிப்கத்ரி,
- சென்னை அடையாறு கவுரசனி பீர் மஸ்ஜித் தலைமை இமாம் எம்.சைதுதீன் பசில் பாகவி,
- ஷியா பிரிவு தலைமை காஜி மவுலானா குலாம் முகமது மேதிகான்,
- திருப்பூரைச் சேர்ந்த அல்தாப் உசேன்,
- சென்னையைச் சேர்ந்த குணங்குடி ஆர்.எம்.ஹனீபா,
- சென்னை புரசைவாக்கம் மசூதி தலைவர் நாகூர் ஏ.எம்.நஜிமுதீன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி