Breaking News

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..7 பேர் உயிரிழப்பு.

அட்மின் மீடியா
0

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..7 பேர் உயிரிழப்பு.



ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் லடாக் அருகே சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

பர்தாபூர் முகாமிருந்து 26 வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒன்று முன்னணி துணை நிலையமான ஹனிஃப் பகுதிக்குச் சென்றது. சாலையில் இருந்து தடுமாறி ஷீயோக் நதியில் 50 அடி ஆழத்தில் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் இருந்த அனைவரும் காயமடைந்தனர்.விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் விரைவாக முடுக்கிவிடப்பட்டு, காயமைடந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பர்தாபூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback