Breaking News

தாறுமாறாக உயர்ந்த வணிக சிலிண்டர் விலை ஒரே நாளளில் ரூ.102 உயர்வு

அட்மின் மீடியா
0

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு 

மே மாதத்தின் முதல் நாளான இன்று வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.


ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் சிலிண்டரின் விலையை மத்திய அரசு உயர்த்தி வரும் நிலையில் மே 1ம் தேதியான இன்று வணிக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்ந்து தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback