Breaking News

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் படித்து யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி-மேலும் 23 பேர் தேர்வு

அட்மின் மீடியா
0

021ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சிதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின அதில் இந்திய அளவில்  முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். இதில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் படித்த மாணவி  ஸ்ருதி சர்மா என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் அங்கு பயின்ற 23 பேர் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்




உத்திரபிரதேச மாநிலம் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா  மத்திய பொது பல்கலைக்கழகம் 1920 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் போது உத்தரப் பிரதேசம் மாநிலைத்தில் உள்ள அலிகர் நகரில் நிறுவப்பட்டது. 

மேலும் கடந்த 1988 இல் இந்திய நாடாளுமன்றம் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரித்தது.உருது மொழியில், ஜாமியா என்றால் பல்கலைக்கழகம், மில்லியா என்றால் தேசியம் என்று பொருள்.ஜாமியா மில்லியா இஸ்லாமியா ஒரு பன்முக கல்வி முறையினை வழங்குகின்றது. இது பள்ளிப்படிப்பு, இளங்கலை, முதுகலை, எம்.பில் / பி.எச்.டி மற்றும் பிந்தைய முனைவர் கல்வி ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக குடிமைப்பணிகளுக்கான(சிவில் சா்வீசஸ்) முதல்நிலைத் தோ்வு மற்றும் இறுதி தோ்வுகளுக்கான இலவச பயிற்சியும் அளிக்கப்படுகின்றது

இந்த பல்கலைக்கழகத்தின் ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமி, சிறுபான்மையினா், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் பெண்களுக்கு இந்த தோ்விற்கான பயிற்சியை அளிக்கிறது. இது வரை இங்கு பயின்ற 245 போ்களை குடிமைப்பணிகளிலும் மேலும் 376 போ்களை மற்ற மத்திய, மாநில பணிகளுக்கான சேவைகளிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா்




இந்த நிலையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கடந்த 2021 ம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் நேற்று  (மே 30ஆம் தேதி) வெளியாகி உள்ளன. இதில் முதலிடத்தை ஸ்ருதி சர்மா என்ற மாணவி பிடித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புனித ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்துள்ள இவர் . ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டபடிப்பு படித்துள்ளார்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் யூபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார் ஸ்ருதி சர்மா.

முதலிடம் பெற்றது குறித்து ஸ்ருதி சர்மா கூறும்போது, தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பயிற்சி மையத்தில் படித்த 23 பேர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

1 ஸ்ருதி ஷர்மா 0803237 

2 மினி சுக்லா 6903989 96

3 அரீப நோமான் 0811577 109

4 முகமது சுபூர் கான் 0851623 125

5 விகல்ப என். விஸ்வகர்மா 6413177 275

6 முகமது சாகிப் ஆலம் 2605873 279

7 வந்தனா மீனா 0833887 331

8 நாஜிஷ் உமர் அன்சாரி 6404515 344

9 ராம்தேகே சுதாகர் 6303875 358

10 சுமைலா சௌத்ரி 0844663 368

11 மாவிஸ் அப்துல் கரீம் தக் 0506335 386

12 சுவிக்யா எஸ் சந்திரா 0827313 394

13 எம்டி கமாருதீன் கான் 879730 414

14 பைசல் ராசா 5806980 441

15 மசூம் ராஜா கான் 6404830 457

16 தஹ்சீன் பானு தாவதி 0504688 482

17 ஷேக் முகமது ஜைப் ஜாகிர் 6500901 496

18 பிரியா மீனா 6505603 548

19 அன்வர் உசேன் 1800124 600

20 ராஜ ரத்தினம் கொல்லா 6208279 609

21 யோகேந்திர சிங் 0800521 656

22 உமேஷ் மீனா 0861961 664

23 அங்கித் பராய்க் 4117418 667

மேலும் அடுத்த ஆண்டு 2022-2023 சிவில் சர்வீசஸ் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கு. சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி15.06.2022 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.jmi.ac.in/upload/publication/pr1_English_2022May30.pdf

விண்ணப்பிக்க:-

https://www.jmi.ac.in/

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback