Breaking News

நேபாளில் 22 பயனிகளுடன் சென்ற விமானம் விபத்து புகைபடத்தை வெளியிட்ட நேபாள் ராணுவம்..

அட்மின் மீடியா
0

நேபாளம் 22 பயணிகளுடன் நேற்று மாயமான விமானம், மஸ்டாங் பகுதியில் விழுந்து நொருங்கியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்




நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை சுமார் 10 மணியளவில் தாரா ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது.விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்தார்கள் என கூறப்படுகின்றது

இந்நிலையில், மாயமான விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் உள்ள சனோஸ்வெர் என்ற இடத்தில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது.விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கிடப்பதை ராணுவம் இன்று கண்டுபிடித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன? யாரேனும் உயிருடன் உள்ளனரா? என்பது குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.






Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback