ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கு ₹1,000 பணம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!!!
தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை திட்டம் – ஜூலை 15 முதல் அமல்!
மாணவிகள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில், கல்லூரிகளில் சேர்ந்து கல்வி காலம் முடியும் வரை பயிலும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 1,000 ரூபாய் செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு ,பட்டயப்படிப்பு, அல்லது தொழில் படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை , அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் என்றும் , மற்ற கல்வி உதவி தொகை பெற்று வந்தாலும் இந்த தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது
இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ. 1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுக்கு 12000 ரூபாய் வரை மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்த திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான மாணவிகள் பயன்பெறுவார்கள்.
அடுத்த கல்வியாண்டில் சேரும் முதல் வருட கல்லூரி மாணவிகளுக்கு ஜூலை 15 முதல் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
Tags: தமிழக செய்திகள்