Breaking News

ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு, பொது தேர்வு தேதியும் அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகள் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அப்போது அவர் கோடை விடுமுறைக்கு பின் 1 -10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார் மேலும்

1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு

11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறப்பு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறப்பு 

என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும்  வரும் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகள் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளன

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவக்கம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 3ல் தொடக்கம் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback