Breaking News

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு..

அட்மின் மீடியா
0

ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியீடு..!!

ITI முடித்தவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்று!ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ஆம் வகுப்புகளுக்கு இணையான கல்விச்சான்று வழங்க அரசாணை வெளியீடு.

தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இணையான கல்விச்சான்றிதழ் வழங்க தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். 

8-ம் வகுப்பு படித்து விட்டு ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்பு முடித்ததற்கு இணையான சான்றும், 

10-ம் வகுப்பு முடித்து ITI படித்தவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான சான்றும் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உயர்கல்வி பயில மட்டுமே இணை சான்றிதழ் பயன்படும் என்றும் அரசு வேலைவாய்ப்புக்கு இணை சான்றிதழ் கருத்தில் கொள்ளப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback