Breaking News

அமேசான், ஜியோ மார்ட்க்கு போட்டியாக டாடா நியூ ஆப் அறிமுகம்.... மளிகை சாமான் முதல் விமான டிக்கெட் வரை ஒரே ஆப்பில் ...முழு விவரம்...

அட்மின் மீடியா
0
டாடா குழுமத்தின் சூப்பர் செயலியான Tata Neu ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. 


டாடா நிறுவனத்தின் மூலமாக “டாடா நியூ” செயலி ஒன்று அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் சேவைகளை உள்ளடக்கிய அப்ளிகேஷன் ஆகும் இது அமேசான், பேடிஎம், ஜியோக்கு போட்டியாகஇருக்கும் என்று கூறப்படுகிறது.இந்த டாடா நியூ செயலியில்

ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா ஆகியவற்றில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல், 

தாஜ் குழுமத்தில் ஹோட்டல்களை முன்பதிவு செய்தல், 

பிக்பாஸ்கெட்டில் இருந்து மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்தல், 

1mg இலிருந்து மருந்துகளை ஆர்டர் செய்தல், 

குரோமாவில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் வெஸ்ட்சைடில் இருந்து ஆடைகள் வாங்குதல் போன்ற பல்வேறு Tata Group டிஜிட்டல் சேவைகளை இந்த சூப்பர் செயலியில் செய்யலாம்.

இந்த ஒரு செயலியை மட்டும் நமது மொபைல் போனில் வைத்துக்கொண்டால் நாம் விரும்பும் எந்த பொருளாக இருந்தாலும் வீட்டில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.உணவுக்கு ஒரு செயலி, மளிகை பொருட்களுக்கு ஒரு செயலி, தியேட்டர் டிக்கெட் எடுக்க ஒரு செயலி என இதுவரை பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வந்த நிலையில் இனி டாடா நியூ என்ற இந்த செயலியை மட்டும் வைத்துக் கொண்டாள் எல்லாமே இதன் கீழ் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback