மீண்டும் அதிகரிக்கும் கொரானா!! தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருவதால் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைள் தொடர்பாக தமிழக முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மருத்துவத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்