சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்து அவதூறு ஒருவர் கைது
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் சமூக வலைத்தளங்களில் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், முகம்மது நபி குறித்தும் அவதூறு கருத்துக்கள் பதி விட்டதாகவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சமூக வலைத்தளங்களில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த அருள்முருக கிருஷ்ணன்(வயது 36) என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீசார் அருள்முருக கிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்