Breaking News

மரம் ஏறும் ஸ்கூட்டர் விவசாயியின் கண்டுபிடிப்பு வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகில் உள்ள கோமலே கிராமத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த கண்பதி பட், கல்லூரி படிப்பில் வேளாண் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்,மேலும் இவர் பாக்கு மரப்பண்ணை வைத்துள்ளார். 


விவசாயியான இவர் ஒவ்வொரு நாளும் பாக்கு மரங்கள் ஏறி அறுவடை செய்கிறார்.பாக்கு மரங்களின் உயரம் சுமார் 18 முதல் 20 மீட்டர் வரை. அவற்றை ஒவ்வொரு நாளும் ஏறி இறங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அதோடு கணபதிக்கு வயதாகிவிட்டது. என்ன செய்யலாம் என்று யோசித்துகணேஷ் உயரமாக இருக்கும் மரங்களில் ஏறுவதற்கு நிரந்தரமான ஒரு தீர்வாக Tree Climbing scooter-ஐ கண்டுபிடித்துள்ளார். 



ஒரு லிட்டர் பெட்ரோலில் 90 மரங்களின் மீது ஏறி, இறங்கி விடலாம்.

 இயந்திரத்தில் இரண்டு டயர்கள் மற்றும் ஒரு ரோலர் உள்ளது. 

சவுகரியமாக அமரும் வகையில் இருக்கை உள்ளது

80 கிலோ எடையுள்ள நபர்வரை இதில் ஏறலாம்

இயந்திரத்தின் அடிப்பகுதியில் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது

இயந்திரத்தின் வேகத்தை தை கட்டுப்படுத்தும் பிரேக்கிங் கட்டமைப்பு கைப்பிடியில் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மரம் ஏறும் பைக்குக்கு தொழிலாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

வீடியோ:-

https://www.youtube.com/watch?v=gVCCgxBNIzI

Tags: முக்கிய செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback