தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்தியை நம்பாதீர்கள்- மருத்துவத்துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் யாரும் பதற்றப்பட தேவையில்லை என விளக்கமளித்தார். மேலும், கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Tags: தமிழக செய்திகள்