Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளி எம்.பி.கோட்டா மாணவர் சேர்க்கை ரத்து

அட்மின் மீடியா
0

மத்திய கல்வி அமைச்சகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. 

இந்த கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் 13-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 

இந்நிலையில் இந்த பள்ளிகளில் எம்.பிக்களுக்கான சிறப்புஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து கேந்திரிய பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. 

தங்கள் தொகுதிகளில் இருந்து தலா 10 மாணவர்களுக்கு  எம்.பி.க்கள் பரிந்துரை செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில் இனிமேல் எம்பிக்களுக்கு என சிறப்பு ஒதுக்கீட்டு இல்லை என தடை விதித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதுஎனவே எம்பிக்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் படி கேந்திரிய வித்யாலா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback