Breaking News

இன்று முதல் தமிழ்நாட்டில் டோல்கேட் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!!

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


தமிழகத்தில் மட்டும் 49 சுங்கச்சாவடிகளில் 27 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுங்க சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணம் உயரும் என்று மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. அதன்படி 460க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது . 

கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூபாய் 5 முதல் 10 வரையும் பேருந்து, டிரக்குகளுக்கு ரூ.15ம், 4 முதல் 6 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனத்துக்கு ரூ.25ம், கனரக வாகனத்துக்கு ரூ.30ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback