Breaking News

உத்திர பிரதேசம் மத வழிபாட்டுத் தலங்களில் 6 ஆயிரம் ஒலிபெருக்கிகள் நீக்கம்

அட்மின் மீடியா
0

உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த  72 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.



உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில், மத வழிபாட்டுத் தலங்களில் முன் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை அகற்றவும் அனுமதி பெற்ற ஒலிபெருக்கிகளில் ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளை போலீஸார் வேகமாக அகற்றி வருகின்றனர். 

கடந்த 72 மணி நேரத்தில் 6,031 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. 29,674 ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மேலும் குறைந்த அளவிலான ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் மாநிலம் முழுவதும் 17 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback