நடுரோட்டில் 55 பயணிகளுடன் பேருந்தில் திடீரென பற்றிய தீ!!! வைரல் வீடியோ
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பெரும் அச்சம் நிலவியது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கிட்டிகதான் என்ற இடத்தின் அருகே நகரப்பேருந்து ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 55 பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது திடிரென பேருந்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்தி உடனடியாக பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது. சாலையில் பேருந்து எரிந்துகொண்டிருந்ததை மக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து நெருப்பை அணைத்தனர். எனினும் பெருந்தின் பெரும் பகுதி தீயில் எரிந்தது. ஓட்டுநரின் துரித நடவடிக்கையால், பேருந்தில் இருந்த 55 பயணிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்