Breaking News

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன சில மாற்றங்கள் என்ன என்ன

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன சில மாற்றங்கள் என்ன என்ன 




சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையானது அதிகரிப்பது வழக்கமான ஒரு விஷயம். ஆக தொடர்ந்து சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலையானது அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 1 அன்று சிலிண்டர் விலையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மருந்துகள் விலை உயர்வு

800-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் விலை ஏப்ரல் 1 முதல் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணயம் ஆணையம் அறிவித்துள்ளது. 


அஞ்சலக திட்டங்களுக்கான வட்டி

ஞ்சலகத்தின் மாதாந்திர சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், டைம் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதமானது, ஏப்ரல் 1 முதல் நேரடியாக வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்பப்படும். 


கிரிப்டோகரன்சிக்கு 30% வரி விதிப்பு

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என கடந்த பட்ஜெட்டிலேயே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.


ஆக்ஸிஸ் வங்கி குறைந்தபட்ச இருப்பு வரம்பு

ஆக்ஸிஸ் வங்கியின் சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்பு வரம்பு 10,000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback