தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!! எந்த எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு..முழு விவரம்...PDF
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது,ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!!
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.
இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை; இதுவரை 75,765 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; எஞ்சிய இணைப்புகளும் விரைவில் வழங்கப்படும்
மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு
பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்
6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி
மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு 7 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு
பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு
வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களுக்கு 500 கோடி ஒதுக்கீடு
கால்நடை பராமரிப்பு துறைக்கு ஆயிரத்து 315 கோடி நிதி ஒதுக்கீடு
குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,966 கிலோ மீட்டர் கால்வாய் சீரமைக்கும்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னைக்கு அருகில் ₹300 கோடியில் தாவரவியல் பூங்கா
மதுரவாயல் - துறைமுகம் மேம்பாட்டு சாலை திட்டத்தை செயல்படுத்த ₹5770 கோடி ஒதுக்கீடு
ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக்கப்படும்
சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி நிதி ஒதுக்கீடு
சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு
துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு
மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு
தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை
சமூக வலைதள பொய் பரப்புரைகளை தடுக்க காவல்துறையில் சமூக ஊடக சிறப்பு மையம்
தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு செய்யப்படும்; தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு
விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம்!
.₹125 கோடி செலவில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும்
காவல்துறைக்கு ₹10,285 கோடி நிதி
19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ரூ.1019 கோடி செலவில் புதிய மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்
பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு
இல்லம் தேடிக் கல்வி திட்டம் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
அரசுப்பள்ளிகள் தவிர பிற பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்
சமூதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது; புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும். ஆண்டுக்கு 4 இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும்
15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும், அதற்காக ரூ.125 கோடி நிதிஒதுக்கீடு; அறிவு சார் நகரம் உருவாக்கப்படும், ஆராய்ச்சிப் பூங்கா நிறுவ ஊக்குவிக்கப்படும்
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் . அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும்
அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை; அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களின் தனித்திறன் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்; அதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.
நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடுவனத்துறை
வனத்துறை பரப்பளவை அதிகரிக்க வன ஆணையம் அமைக்கப்படும்
தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
வட சென்னையில் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்டவைகளுக்காக சென்னை ஆர்.கே நகரில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் வளாகம் அமைக்கப்படும்
தமிழ்வளர்ச்சி துறைக்கு பட்ஜெட்டில் ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
பெரியாரின் சிந்தனைகள், 21 இந்திய மொழிகளில் புத்தகமாக வெளியிட ரூ.5 கோடி ஒதுக்கீடு.
நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்காக ரூ.4,816 கோடி ஒதுக்கீடு.
நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
சுய உதவிக்குழு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு
கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ரூ.1,000 கோடி செலவில் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்துக்கு மானியமாக ரூ.1,520 கோடி ஒதுக்கீடு.
ஏழை மக்களுக்கான வீடுகளை கட்ட ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி ஒதுக்கீடு.
மேலும் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1NYERHowFxbaoeE3zVUNHJcQLGqfg4Jyh/view?usp=sharing
Tags: தமிழக செய்திகள்
