BREAKING நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் எண்ணத்தை கைவிட்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!
நேட்டோ அமைப்பில் உறுப்பினராகும் விருப்பத்தை கைவிட்டதாக உக்ரைன் அறிவிப்பு!
தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,
நேட்டோவில் உக்ரைனை இணைப்பது குறித்த விவகாரத்தில் எனக்கு எப்போதோ ஆா்வம் குறைந்துவிட்டது. உக்ரைனை சோ்த்துக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்பது நன்கு தெரிந்த பிறகு, அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தைக் கைவிட்டுவிட்டேன்.
உக்ரைனை நேட்டோவில் இணைந்து கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை. மேலும் ரஷ்யாவுடனான போர் மற்றும் பல்வேறு சர்ச்சைகளை கருத்தில் கொண்டு தான் நேட்டோ அமைப்பு உக்ரனை சேர்த்துக்கொள்ள அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நேட்டோவில் அமைப்பிலிருந்து எதையும் கெஞ்சியோ, தானமாகவோ பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது. மேலும் அப்படிப்பட்ட நாட்டின் தலைவராக நான் இருக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
மேலும் ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட விரும்புவதாக அவர் கூறினார்.
https://twitter.com/nobby_saitama/status/1501239299848638468Zelensky : "I have cooled down on NATO. NATO is not prepared to accept Ukraine." pic.twitter.com/PvDG1UJGyo
— nobby (@nobby_saitama) March 8, 2022
Tags: வெளிநாட்டு செய்திகள்