Breaking News

நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் பைக் ... வைரல் வீடியோ!!!

அட்மின் மீடியா
0

புனே நகரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

 

 

புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது.

ஓலாவின் S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.

வணிக வளாகங்கள் நிறைந்த அங்காடி பகுதியின் சாலையோரத்தில் அந்த ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி உள்ளது. அடுத்த சில நொடிகளில் அது அப்படியே ‘மளமளவென’ தீ பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

புனேயில் எங்களின் ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது. இந்த விபத்துக்கான மூல காரணத்தைப் புரிந்து கொள்ள நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் புதிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/suryasp7/status/1507731677405417476

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback