Breaking News

உலகில் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபாவில் தமிழரின் பெருமை...ரசித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின் வீடியோ

அட்மின் மீடியா
0

துபாயில் நடைபெற்று வரும் உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களை சந்தித்துஆலோசனை மேற்கொண்டார். 



இந்நிலையில் துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "3200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொளி, உலகின் உயரமான கட்டடமான BurjKhalifa-வில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர்; இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க:-

https://twitter.com/mkstalin/status/1507442624134725632

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback