Breaking News

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய மானியத்துடன் வங்கிக்கடன் நாளை சிறப்பு முகாம்... முழுவிவரம்...

அட்மின் மீடியா
0

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய மானியத்துடன் வங்கிக்கடன் பெற  நாளை 10.03.2022 கிண்டியில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

 

 

இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிவிப்பில்....

 

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் மூலம் வாழ்க்கை மேம்பாடு அடைய சுய தொழில் வங்கிக்கடன் வழங்க பரிந்துரை முகாம் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாடு சேவை மையத்தில் நடைபெற உள்ளது.

சுய தொழில் செய்வதற்கு மானியத்துடன் 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. 

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லா கடன் வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு 50 ஆயிரம் மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட உள்ளது.

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 5 லட்சம் வரை வங்கிக்கடன் வழங்கிட ஆலோசனை நடைபெற உள்ள முகாமில் வழங்கப்பட உள்ளது

எனவே சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் மருத்துவ சான்றிதழ் ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் சிறப்பு முகாமிற்கு நேரில் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback