சேலத்தில் பரபரப்பு - நீதிபதியை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் கைது...
சேலம் அஸ்தம்பட்டி அருகே சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. அதில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4வது குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி பொன்பாண்டி அவரது அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்த போது அதே நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் திடீரென கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட நீதிபதி ஊழியரை தடுத்துள்ளார்.
image courtesy google
இந்த சம்பவத்தில் நீதிபதியின் மார்பு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து நீதிபதி பொன்பாண்டி மருவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்த முயற்சித்த அலுவலக உதவியாளர் பிரகாஷை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அலுவலக உதவியாளர் பிரகாஷ்-க்குபணியிட மாறுதல் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரை கொலை செய்ய பிரகாஷ் முயன்றதாகவும் கூறப்படுகிறது
Tags: தமிழக செய்திகள்