Breaking News

சீக்கியர்கள் விமானத்தில் கத்தி எடுத்து செல்ல அனுமதி

அட்மின் மீடியா
0

விமானத்தில் கிர்பான் எனப்படும் கத்தியை (குறுவாள்) கொண்டு செல்ல சீக்கியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.



சீக்கியர்கள் தங்கள் பாரம்பரிய படி எங்கு சென்றாலும் டர்பன் அணிவதையும், குறுவாள் வைத்துக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், விமானத்தில் சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க விமானங்களில் கத்தியை எடுத்து செல்ல மத்திய அரசு தடை விதித்திருந்தது

இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கிர்பான் எனப்படும் கத்தியை (குறுவாள்) எடுத்து செல்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

மேலும்  கத்தி 22.86 செ.மீ.,க்கு (9 இன்ச்) அதிகமாக இருக்க கூடாது, பிளேடு எனப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.24 செ.மீ.,க்கு (6 இன்ச்) மேல் இருக்க கூடாது என மத்திய விமான போக்குவரத்தின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback