உக்ரைனின் துறைமுக நகரமான கெர்சனை முழுமையாக கைப்பற்றிய ரஷ்யா
அட்மின் மீடியா
0
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை இன்று காலை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மேலும் முழு நகரத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையில் இன்று 7வது நாளாக போர் நடைபெற்றுவருகின்றது தொடர்ந்து ரஷ்யா உக்ரைனில் குறி வைத்த பல முக்கிய நகரங்களை கைபற்றி வருகின்றது
இன்றைய தாக்குதலில், கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்டவை நிறைந்த உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
பெர்டியான்ஸ்க், நகரை தொடந்து கெர்சன் ஆகிய நகரத்தையும் ரஷ்யா பிடித்துள்ளது கெர்சன் என்பது உக்ரைனின் மிகப்பெரிய துறைமுக நகரங்களில் ஒன்று ஆகும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்