பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் படுதோல்வி..!
பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி முதல் இடத்திலும் உள்ளன .
இந்நிலையில், இந்நிலையில், பாஜக கூட்டணியில் களம் கண்ட அமரீந்தர் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலி 13 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Tags: இந்திய செய்திகள்