Breaking News

ஹிஜாப் தீர்ப்பு பற்றி வழக்கு தொடர்ந்த மாணவிகள் வேதனை அம்பேத்கர் உயிரோட இருந்திருந்தா அழுதிருப்பாரு -வீடியோ

அட்மின் மீடியா
0

கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்ததும், மனுதாரர்களாக இருந்த இஸ்லாமிய மாணவிகள் தீர்ப்பிற்கு பின்பாக பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது

ஹிஜாப் அணியாமல் நாங்கள் வகுப்பிற்கு செல்ல மாட்டோம். எங்கள் மதத்திலும், குரானிலும் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்பதை அவர்களிடம் தெரிவிக்கவே நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 

குரானில் ஹிஜாப் பற்றி உள்ளது. ஆனால் கோர்ட்டில் அதை அடிப்படை உரிமை இல்லை என்று எப்படி சொல்ல முடியும். இது மிகவும் தவறு. இஸ்லாமியர்களுக்கு ஹிஜாப் முக்கியம் குரானிலும் அது கூறப்பட்டுள்ளது அவர்கள் எப்படி எங்களுக்கு எதிராக தீர்ப்பு கொடுத்தனர் என்று தெரியவில்லை.

அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் ஹிஜாப் தீர்ப்பு கேட்டு அழுதிருப்பார் மதம் முக்கியமா கல்வி முக்கியமா என கேட்கும் நீங்கள், அரசிடம் கல்வி முக்கியமா? சீருடை முக்கியமா என்று கேளுங்கள். எங்களை படிக்காதவர்கள் ஆக்க முயற்சிக்கிறார்கள். அரசியலமைப்பு மத உரிமையை கடைபிடிக்க அனுமதி அளித்து இருக்கிறது” என மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எங்கள் வழக்கறிஞர் அனைத்து விவரங்களையும் எடுத்துரைத்தார். பல்வேறு ஆதாரங்களை கொடுத்த பின்பும் எங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் மீது அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/thenewsminute/status/1503674804682981376

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback