சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலங்கள் அமைக்க அரசானை வெளியீடு
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் சென்னை, வேலூர், விழுப்புரம், நெல்லை, கோவை மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
முதற்கட்டமாக சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் கீழ்க்கண்ட 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை சிறப்புக்கவனம் செலுத்தி நலத்திட்டங்களை உடனுக்குடன் எவ்வித தாமதமும் இல்லாமல் செயல்படுத்திட மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகத்தினை தேவையான பணியாளர்களுடன் நிரந்தர அடிப்படையில் தோற்றுவித்து அரசாணை பிறப்பித்திடுமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி சென்னை ,வேலூர், விழுப்புரம்,திருநெல்வேலி, கோயம்புத்தூர், ஆகிய 5 மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
இந்திய சிறுபான்மையினருள் இஸ்லாமியர், சீக்கியர், கிறித்தவர், பௌத்தர், பார்சி மற்றும் சமணர் ஆகியோரும் அடங்குவார்கள்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி