Breaking News

தொடர்ந்து 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவைகள்…

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் 4 நாட்கள் மூடப்படுவதால் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிடவும், தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

அதன்படி மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் வருகிற 28, 29-ந்தேதி ஆகிய இருநாட்கள் நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கமும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இதில் அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கிராம மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் என நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 

மேலும் வருகிற சனி (26-ந்தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27-ந்தேதி) இரு நாட்களும் வங்கிகளுக்கு வார விடுமுறையாக உள்ள நிலையில்,. அதற்கு அடுத்து மார்ச் 28, 29 ஆகிய 2 நாட்களுக்கும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதால் மொத்தமாக 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் வங்கி பணிகளான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற அனைத்து சேவைகளும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏ.டி.எம். சேவையும் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

 

அதேபோல் ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் உள்ள 30 நாட்களில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி

ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி கணக்குகளின் வருடாந்திர மூடல் அனைத்து மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 2ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படுகிறது.

நாலாம் தேதி ரஞ்சி வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 5ஆம் தேதி ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் தேதி சனிக்கிழமை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

15 ஆம் தேதி புனித வெள்ளி காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

16ஆம் தேதி கௌகாத்தி வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

21ஆம் தேதி கடியா பூஜை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

23ஆம் தேதி 4-வது சனிக்கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

29ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடுமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. அந்தந்த மாநில பண்டிகைகளுக்கு ஏற்பவே விடுமுறை அளிக்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback