Breaking News

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பற்றி பட்ஜெட்டில் நிதிஅமைசர் அறிவித்தது என்ன!!!

அட்மின் மீடியா
0

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது,ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டில்  பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது 

இந்நிலையில்குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.இதனையடுத்து,தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 போன்றவை அமலுக்கு வர முதல்வர் உத்தரவிட்டார். 

அதேபோன்று பெண்களுக்கான மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. 

இந்நிலையில், இன்று தமிழகத்தில் 2022- 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்றது.தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை 10மணிக்கு தமிழகத்தின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

அதில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பு கட்டாயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பட்ஜெட்டில் அதை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

aஅனால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் சரியான பயணிகளை சென்றடைய,திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும்,மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback