Breaking News

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்து , மாத்திரைகள் 10% உயர்வு!!

அட்மின் மீடியா
0

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்த்தப்படவுள்ளது.

மருந்து மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதன் அடிப்படையில் தற்போது மருந்துகளின் விலையை 10.7% விலை உயர்த்த இந்திய தேசிய மருந்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 


இதன்படி காய்ச்சல், தொற்றுகள், தோல் நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சுமார்  800  மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback