ஒரு முறை I Love You என்று சொன்னால் பாலியல் தொல்லை ஆகாது….மும்பை கோர்ட் தீர்ப்பு!
மும்பையில் 22 வயது இளைஞர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று 'ஐ லவ் யூ' என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கல்பனா பாட்டீல், குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.
மேலும் ஒருவரிடம் மற்றொருவர் 'ஐ லவ் யூ' என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது.ஆகும் ஒருவேளை அந்தப் பெண் நிராகரித்து, மேலும் பின்தொடர்ந்து அந்த இளைஞர் தொந்தரவு செய்தால் குற்றமாக கருதலாம்.
மேலும்குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் இதனை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டார்.
Tags: இந்திய செய்திகள்