Breaking News

உலகின் மிகப்பெரிய விமானத்தை உக்ரைனில் குண்டு வீசி அழித்த ரஷ்யா

அட்மின் மீடியா
0

 உக்ரைனில் உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷிய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்



5 ம் நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா. விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ராணுவ மையங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது

உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ஏ.என்-225 ‘மிரியா’ என்று பெயரிடப்பட்ட அந்த விமானம் ரஷியாவின் ஏவுகணை தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback