நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பினார் ஆளுநர்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்க்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில ஆளுநர் திரு ஆர் என் ரவி, பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்.1-ஆம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி ஒன்றை வெளியுட்டுள்ளது.
கடந்த தமிழக சட்டமன்றத்தில், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறிய நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பினார்
Tags: தமிழக செய்திகள்