Breaking News

சிப் வைத்த இ-பாஸ்போர்ட்டின் சிறப்பு அம்சங்கள்! என்ன !! என்ன!!

அட்மின் மீடியா
0

மத்திய பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர், 2022-23 ஆம் ஆண்டில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் எலக்ட்ரானிக் சிப் அடங்கிய இ-பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்படும் என்றார். 

பயோ மெட்ரிக் பார்ஸ்போர்ட் என அழைக்கப்படும் இ பாஸ்போர்ட்கள், ஏடிஎம் கார்டுகள் போல சிப் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். அந்த சிப்பில் சம்மந்தப்பட்டவர்களின் முழு விவரங்கள் அடங்கி இருக்கும்.




இ-பாஸ்போர்ட்டின் சிறப்பு அம்சங்கள்! 

இ-பாஸ்போர்ட் (E-Passport) என்பது சாதாரண பாஸ்போர்ட்டைப் போலவே இருக்கும், ஆனால் டிரைவிங் லைசென்ஸ்,ஏடி எம் கார்டில்  உள்ளதைப் போன்ற சிப் இ- பாஸ்போர்ட்டிலும் காணப்படும். 

இந்த சிப்பில், பயணிகளின் முழுமையான தகவல்கலுடன் பயோமெட்ரிக் தரவுகளும் இருக்கும். பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற தகவல்கள் இந்த மைக்ரோசிப்பில் சேமிக்கப்படும். இந்த சிப் மூலம் இமிகிரேஷன் கவுன்டரில் பயணிகளின் சரிபார்ப்பு பணி விரைவாக நடப்பதோடு, போலி பாஸ்போர்ட் பிரச்சனை ஒழியும் என்பது சிறப்பு. 

பல நாடுகளில் இந்த பாஸ்போர்ட் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback