உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ஊரடங்கு அறிவிப்பு.. வெளியே இருந்தால் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் என மேயர் அறிவிப்பு..
ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் தலைநகர் கீவில் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனவும் , ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் எனவும் கீவ் மேயர் விட்டலி கிலிட்ச்கோ அறிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கின் பொது போக்குவரத்து இயங்காது என்றும், மெட்ரோ ரயில்நிலையங்களை 24 மணி நேரமும் மக்கள் தங்கும் இடங்களாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு பிப் 28 ஆம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், ஊரடங்கின் போது வெளியில் இருப்பவர்கள் எதிர் நாட்டவர்களாக கருதப்படுவார்கள் எனவும் கீவ் மேயர் தெரிவித்திருக்கிறார்.
ஆகையால் அனைத்து ஊழியர்களும் சரியான நேரத்தில் வீடு திரும்புமாறும் ,பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன
Tags: வெளிநாட்டு செய்திகள்