Breaking News

அரசு பஸ்களில் செல்போனில் சத்தமாக பேச, பாட்டு கேட்க தடை கேரள அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக இந்த அறிவிப்பை அனைத்து பஸ்களின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கேரளவை சேர்ந்த மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback