முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு தள்ளுபடி....
அட்மின் மீடியா
0
தமிழகத்தில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை ( பிப் 19 ) அன்று நடந்து
முடிந்தது. ஆனால் இந்த தேர்தலின்போது சென்னை ராயபுரத்தில் 49வது வார்டில்
கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் தாக்கினர்.இது தொடர்பான
வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து திமுக
தொண்டரை தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர்
மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் . இதையடுத்து
நள்ளிரவு 12 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எழும்பூர்
நீதிமன்றத்தில் ஜார்ஜ்டவுன் 15வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முரளி கிருஷ்ணா
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்துஜெயக்குமாரை
நீதிமன்ற 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார்
பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது இன்று 2ஆவதாக ஒரு வழக்கும் பதிவானது. வாக்குப்பதிவு தினத்தன்று சாலை மறியல் ஈடுபட்டதாக அந்த வழக்கு பதிவானது. அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுதல் மற்றும் தொற்றுநோய் பரவ காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஏற்கெனவே கைதான வழக்கில் ஜாமீன் கோரி ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தார்.
Tags: தமிழக செய்திகள்