Breaking News

ஹிஜாப்அணிந்து வந்தவர்களுக்கு தனி வகுப்பறை!! வலுக்கும் சர்ச்சை!

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் இஸ்லாமிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. 



இதையடுத்து மாணவர்கள் மத அடையாளங்களைச் சுட்டிக்காட்டும் வகையிலான உடைகளை அணிந்துவரக் கூடாது என அரசு உத்தரவிட்டது. 

இதுதொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மாணவிகள் முறையிட்டுள்ளனர். ஆனாலும் அந்த மாணவிகள் பர்தா அணிந்து வருவதை நிறுத்தவில்லை. பர்தா அணிந்து வந்தால் பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த பள்ளி கூறியுள்ளது. மேலும் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback