போருக்கு செல்லும் தந்தையை கண்ணீருடன் வழி அனுப்பும் சிறுமி...வைரல் வீடியோ
உக்ரைனைச் சேர்ந்த 18 - 60 வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் கட்டாய ராணுவ சேவையை உக்ரைன் அரசு அமல்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை ரஷ்யபடைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி தான் போருக்கு செல்லும் போது இருவரும் பாசத்தால் அழும் வீடியோ ஒன்று பார்ப்பர்வர்களின் மனதை நொறுங்கும் வகையில் உள்ளது.
இந்த வீடியோவில் பிங்க் நிற ஜாக்கெட்டை அணிந்திருக்கும் சிறுமியை தனது தந்தையை கட்டிப்பிடித்த அழும் வீடியோ வைரலாகி உள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/simran/status/1497025794149072897
A Ukrainian father says goodbye to his daughter as he sends her to safety.
— Simran Jeet Singh (@simran) February 25, 2022
Devastating. pic.twitter.com/kFPxb9KMiC
Tags: வெளிநாட்டு செய்திகள்