ரஷ்யபடை முன்னேறி வருவதை தடுக்க தற்கொலை படையாக மாறிய உக்ரேனிய வீரர்....
ரஷியா முன்னேறி வருவதை தடுக்க பாலத்தில் தனக்குத்தானே குண்டு வைத்து வெடிக்கச் செய்த உக்ரேனிய வீரர்!
ரஷ்யா - உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும், உக்ரைன் தான் தற்போது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தழி வருகின்றன.
இரு நாடுகளிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.குறிப்பாக, அங்குள்ள கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் விதமாக, உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடி வைத்து, வெடிக்கச் செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
உக்ரைன் கெர்சன் பிராந்தியத்தில் இருக்கும் ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையாக வந்து கொண்டு இருந்தது அதனை தடுக்கும் விதமாக, துணிச்சலாக செயல்பட்டு உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தனது உயிரை கொடுத்து வீர மரணம் அடைந்திருக்கிறார்.தனது நாட்டிற்காக தனது உயிரை கொடுத்து தியாகம் செய்த உக்ரைன் நாட்டு வீரரின் பெயர் விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் ஆவர்.உக்ரைன் வீரரின் செயலால் ரஷியர்கள் நுழைவதை பின்தங்க வைத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்