Breaking News

5 வது ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டு சிறை!60 லட்சம் அபராதம்

அட்மின் மீடியா
0

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



பீகார் முதலமைச்சராக லாலு பிராசத் யாதவ் இருந்தபோது 1990களில் தும்கா கருவூலத்தில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக லாலு பிரசாத்திற்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் கால்நடைத் தீவன முறைகேடு தொடர்பான 4 வழக்குகளிலும் லாலு பிரசாத் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில்,  கால்நடை தீவன ஊழல் தொடர்புடைய 5வது வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியாகி உள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback